உள்ளூர் செய்திகள்

தேனி விளையாட்டு அரங்கில் 7-வது ஆசிய ஹாக்கி கோப்பையை பொதுமக்களுக்கு கலெக்டர் ஷஜீவனா பார்வைக்கு வைத்தார்.

தேனிக்கு வந்த ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபிக்கு உற்சாக வரவேற்பு

Published On 2023-07-25 04:57 GMT   |   Update On 2023-07-25 04:57 GMT
  • இந்தியா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
  • தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த பாஸ் தி பால் கோப்பைக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

தேனி:

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில், 7-வது "ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி" தொடர்பாக "பாஸ் தி பால் கோப்பைக்கு" கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

16 ஆண்டுகளுக்கு பின்பு நமது மாநிலத்தில் நடைபெற உள்ளது. சர்வதேச அளவிலான இப்போட்டிகளை சிறப்பாக கொண்டாடவும் இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், பாஸ் தி பால் டிராபி டூர் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களை கடந்து தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த பாஸ் தி பால் கோப்பைக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சரவணக்குமார் எம்.எல்.ஏ., விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கோப்பையுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். விளையாட்டு வீரர்களுக்கு இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஏ.எஸ்.பி. சுகுமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, தேனி-அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தேனி ஹாக்கி சங்க தலைவர் செந்தில், ஹாக்கி சங்க செயலாளர், சங்கிலிகாளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News