உள்ளூர் செய்திகள் (District)

அரியலூரில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் முகாம்

Published On 2023-02-10 09:14 GMT   |   Update On 2023-02-10 09:14 GMT
  • அரியலூரில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது
  • ரூ.2.6லட்சம் கல்வி உதவிதொகை கலெக்டர் வழங்கினார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வரி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 52 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு, 7 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில் 8 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு ரூ.2.60 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும், தென்பிராந்திய தளபதி, சென்னை அவர்க ளிடமிருந்து பெறப்பட்டுள்ள பாராட்டுச் சான்றிதழ் 13 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலை வாணி, உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) சரவணன், கண்காணிப்பாளர் கலையரசி காந்தி மதி மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News