- குரு பூஜை விழா நடைபெற்றது.
- 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வெள்ளைப்பிள்ளையார் கோவில் தெரு, வெற்போடை எனும் குளக்கரையில் அமைந்துள்ள ராமலிங்கம் எனும் குருநாத சுவாமியின் 137-வது ஆண்டு குரு பூஜை விழா நடந்தது. இதையொட்டி காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக பெரிய ஏரி கீழக்கரையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு குரு நாத சுவாமிகளின் திருவீதி உலா காட்சி நடந்தது. இதில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது."