ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு
- ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது
- நாளை நடைபெறுகிறது
அரியலூர்:
அரியலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதற் கட்ட நேர்முகத் தேர்வு ஜெயங்கொண்டத்தில் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் பொது மேலாளர் அறிவுக்கரசு கூறியதாவது:-
108 ஆம்புலன்ஸில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பு வதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு ஜெயங்கொண்டம் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி சாலை கமிட்டி அருகில் நாளை (18-ந் தேதி) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
மருத்துவ உதவியாளர்: வயது 19- 30 வயதுக்குள் இருக்க வேண்டும், பிஎஸ்சி நர்சிங், டிஎம்எல்டி, ஏஎன்எம் அல்லது லைஃப் சயின்ஸ் படிப்புகளில் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறையானது முதலில் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த அடிப்படை முதலுதவி ,செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோ திக்கப்படும்.இறுதியாக மனிதவள துறையின் நேர்முகதேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சிக்கு முன்னர் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓட்டுநர் பணி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 24 -35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இலகுரக வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். முதல் கட்டமாக எழுத்து தேர்வு , தொழில்நுட்ப தேர்வு, மனித வள நேர்காணல், சாலை விதிகள் சம்பந்தமான தேர்வு, கண்பார்வை திறன் சோதிக்கும் தேர்வு போன்றத் தேர்வுகள் நடைபெறும். மாதம் ஊதியமாக 15,235 வழங்கப்படும்
அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பனிக்குண்டான தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற்றவர்கள் 12 மணி நேர இரவு மற்றும் பகல் ஷிப்ட் முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர்.நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தங்களது சான்றிதழ்களின் அசல், நகல்களை கொண்டு வரவேண்டும். மேலும் சந்தேகங்களுக்கு 9154250969 என்ற கைப்பேசி எண்ணில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.