உள்ளூர் செய்திகள்

ராமிய அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்

Published On 2023-10-05 04:01 GMT   |   Update On 2023-10-05 04:01 GMT
  • அரியலூரில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்
  • ஊழியர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி ஆணை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன

அரியலூர்,

அரியலூர் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் திருச்சி கோட்டம் சார்பில் அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா ட்டத்தில், ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி பென்ஷன் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் புதிதாக பணியில் சேர்ந்திடும் ஊழியர்களுக்கு 2-ம்கட்ட டி.ஆர்.சி.ஏ. வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த ஜி.டி.எஸ். ஊழியர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அச்சங்கத்தின் கோட்டத் தலைவர் என்.கோபாலகி ருஷ்ணன் தலைமை வகி த்தார் செயல் தலைவர் வி.ஜெயக்குமார், கோட்டச் செயலர் கே.மருத முத்து, பொருளாளர் ஏ.பரமசிவம் மற்றும் சங்கத்தை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News