உள்ளூர் செய்திகள்

பழங்குடி, இருளர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

Published On 2022-06-07 08:30 GMT   |   Update On 2022-06-07 08:30 GMT
  • பழங்குடி, இருளர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று தமிழர் நீதி கட்சி நிறுவனர் தெரிவித்துள்ளார்.
  • 76 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த வசதியும் செய்து தர வில்லை.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி(கி),முத்துசேர்வாமடம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடி, இருளர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதியிடம், தமிழர் நீதி கட்சி நிறுவனர் சுபா.இளவரசன் கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் மீன்சுருட்டி அடுத்த குண்டவெளி(கி), முத்துசேர்வாமடம் உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடி மற்றும் இருளர் மக்கள் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாகியும் இதுவரை இப்பகுதி மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடையாது. அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே கலெக்டர் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் அடுத்த வாரம் குண்டவெளியில் இருளர் மக்களுடன் இணைந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News