உள்ளூர் செய்திகள் (District)

கோவில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

Published On 2022-10-12 09:20 GMT   |   Update On 2022-10-12 09:20 GMT
  • கோவில் உண்டியலை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றனர்
  • போலீசார் தீவிர விசாரணை

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிச்சனூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அக்னி வீரனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு விசேஷ தினங்கள் தவிர்த்து வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே வீரனாருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை கோவிலில் பூஜை செய்வதற்காக பூசாரி இளமாறன் சென்றார். அப்போது கோவிலுக்குள் இருந்த உண்டியலை காணாமல் திடுக்கிட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்த உண்டியல் காணிக்கை பணம் கோவில் நிர்வாகத்தால் எடுக்கப்ப டவில்லை. ஆகவே அதில் ரூ. 2 லட்சத்துக்கும் மேல் பணம் இருக்கலாம் என கூறப்பட்டது. மேலும் அந்த உண்டியல் சுமார் 125 கிலோ எடை கொண்டதாகும். அதனை ஒருவர் அல்லது இருவரால் பெயர்த்து எளிதில் தூக்கிச் செல்ல முடியாது.

குறைந்த பட்சம் நான்கு பேராவது இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டிரு க்கலாம் என தெரிகிறது.

கொள்ளையர்கள் சாவகாசமாக சில மணி நேரம் உட்கார்ந்து இரும்பு கம்பிகளால் தோண்டி தூக்கிச் சென்றிருக்கலாம் என கருதப்ப டுகிறது. இது பற்றி இளமாறன் ஜெயங்கொ ண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொ ண்டனர். 125 கிலோ எடை கொண்ட கோவில் உண்டியலை கொ ள்ளையர்கள் அலாக்காக தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

Tags:    

Similar News