உள்ளூர் செய்திகள் (District)

கோர்ட் தீர்ப்பை வரவேற்று பொதுமக்கள் கொண்டாட்டம்

Published On 2022-09-16 08:39 GMT   |   Update On 2022-09-16 08:39 GMT
  • கோர்ட் தீர்ப்பை வரவேற்று பொதுமக்கள் கொண்டாடினர்
  • டாஸ்மாக்கடை திறக்க தடை

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரிய மணல் கிராமத்தில் புதிதாக மதுபான கடை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் புதிய மதுபான கடைகள் திறக்க கூடாது என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இதனை அடுத்து மதுபான கடை திறப்பது அவ்வப்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடையை திறந்து விற்பனையை துவங்கினர். இதனை அறிந்த பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு பாக்ஸ் மது பாட்டில்களை வெளியில் எடுத்து வைத்து கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் பாலு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் மதுபான கடையை திறக்க கூடாது என உயர் நீதிமன்றம் அதிரடி தடை விதித்தது. உயர் நீதிமன்றம் தடை விதித்தது தொடர்ந்து பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கோர்ட் தீர்ப்பை வரவேற்று பா.ம.க. மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Tags:    

Similar News