பாளையில் ஆயுதப்படை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் 'திடீர்' சாவு
- பாளை ஆயுதப்படையில் முத்துராஜ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
- முத்துராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மானூர் களக்குடியை அடுத்த திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 52).
சப்- இன்ஸ்பெக்டர்
இவர் கடந்த 1993-ம் வருடம் தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். அதைத்தொடர்ந்து பதவி உயர்வு பெற்று தற்போது பாளையில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
இதனையடுத்து அங்குள்ள போலீஸ் புதிய குடியிருப்பில் மனைவி ஜெயா மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். மகன்கள் இருவரும் என்ஜினியரிங் முடித் துள்ளனர்.
'திடீர்' சாவு
முத்துராஜுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டில் இருந்த முத்துராஜ் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் முத்துராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து பெரு மாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே முத்துராஜ் உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் இன்று மாலை அவரது சொந்த ஊரான திருமலாபுரத்தில் போலீசாரின் இறுதி அஞ்சலியுடன் உடல் அடக்கம் நடைபெறுகிறது.