உள்ளூர் செய்திகள் (District)

அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் இளைஞர்களுக்கு கலைப் போட்டிகள்

Published On 2023-11-18 09:59 GMT   |   Update On 2023-11-18 09:59 GMT
  • 5 பிரிவுகளில் கலைப்போட்டிகள் நடைபெற்றது.
  • 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரி,  

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள் இன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இள ஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, கருணாநிதி நூற்றாண்டு விழாவினைக் கருப்பொருளாகக் கொண்ட மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைப் போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

அந்த ஆணையின்படி தருமபுரி மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் அரசு கலைக்கல்லூரியில் இன்று கலை போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியை கலைப் பண்பாட்டு துறை உதவி இயக்குனர் நீலமேகம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் கலைப்போட்டிகள் நடைபெற்றது. கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைசிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஓயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் இளை–ஞர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Similar News