உள்ளூர் செய்திகள்
பஞ்சவனநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
- வில்வ இலை, விபூதி உள்ளிட்ட 32 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்.
- தீர்த்தவாரி நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
திட்டச்சேரி ப.கொந்தகையில் உள்ள பெரியநாயகி அம்பாள் உடனுறை பஞ்சவனநாதர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மையாருக்கு வில்வ இலை,விபூதி,திரவிய பொடி,மஞ்சள்,அரிசி மாவு உள்ளிட்ட 32 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக, ஆனந்த நடராஜ மூர்த்தி,சிவகாமி அம்மையாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதேபோல், திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவில், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில், சியாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.