தருமபுரி வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகள்-அமைச்சர் வழங்கினார்
- மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
- பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார்.
முகாமில் தேர்வு செய்யப்பட்ட 1201 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விதமாக 50 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வழங்கினார்.
இம்முகாமில் கலந்து கொண்ட படித்த மற்றும் படிக்காதவர்களும் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.
அந்தவகையில், இன்றைய தினம், படிக்காத மற்றும் படித்த வேலை தேடும் இளைஞர்கள், ஆண், பெண் இருபாலரும் 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரிகள்வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இவ் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், 52 மாற்றுத்திறனாளிகள் உட்பட 4644 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர். பெங்களுர், சென்னை, கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களை சார்ந்த 239 முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் 15 திறன்பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும், 1201 நபர்கள் (8 மாற்றுத்திறனாளிகள்) பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, முன்னாள் அமைச்சர்பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம். பெ.சுப்பிரமணி, தருமபுரி நகரமன்ற தலைவர் மா.லட்சுமி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் மணிவண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமரை ச்செல்வன், திரு.எம்.ஜி.சேகர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.