உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்.

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு

Published On 2023-10-09 07:30 GMT   |   Update On 2023-10-09 07:30 GMT
  • சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவை கேள்விக்குறியாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர்.
  • ஆண்கள் கட்டண கழிப்ப றை, இலவச கழிப்பறை, பயணிகள் ஓய்வு அறைகளை ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையம், பெரும் நகரங்களான மதுரை, திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை இணை க்கும் பாலமாக இருந்து வருகிறது. தினந்தோறும் ஏராளமான பயணிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவை கேள்விக்குறியாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இன்று மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆண்கள் கட்டண கழிப்ப றை, இலவச கழிப்பறை, பயணிகள் ஓய்வு அறைகளை ஆய்வு செய்தார். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க தினந்தோறும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். கரூர் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் மேற்கூரை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் நேருஜி நினைவு மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்திற்கு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் உதவி ஆணை யர்கள் சரவணகுமார், சாமிநாதன், மாநகர் நல அலுவலர் செபாஸ்டின், சுகாதார ஆய்வாளர் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News