திருத்துறைப்பூண்டியில், கண்தானம் வழங்கியவரின் குடும்பத்தினருக்கு சான்றிதழ்
- கண்தானம் பெறப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- அனைவரும் கண்தான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் வசித்து வந்த ரவிச்சந்திரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் கண்தானம் பெறப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கண் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி, ராய் டிரஸ்ட் சார்பில் கண்தான சான்றிதழை குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இதில் கருணாநிதி, ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன், சென்னை ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன் கூறுகையில்:-
அனைவரும் மண்ணுக்கு போகும் கண்ணை தானம் செய்து அடுத்தவரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, அனைவரும் கண்தான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.