உளுந்தூர்பேட்டையில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் - மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- உளுந்தூர்பேட்டையில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
- தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் உளுந்தூர்பேட்டையில் பயிற்சிசேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையவளாகத்தில் வருகின்ற 11-ந் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்நடை பெறவுள்ளது எனமாவட்ட கலெக்டர்ஸ்ரீதர் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் உளுந்தூர்பேட்டையில் பயிற்சிசேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இந்த தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாமில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஆவின் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும்சிறு,குறு மற்றும் நடுத்தரதொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் என்.சி.வி.டி, மற்றும் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழில் பழகுநராக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும். இதனைதொடர்ந்து ஓராண்டுமுதல்2- ஆண்டுகள்வரை தொழில் பழகுநர் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். இந்த பயிற்சியின் போது மாதாந்திர உதவித்தொகை ரூ.8,500 முதல் ரூ.10,000 வரைநிறுவனத்தால் வழங்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ள இளைஞர்கள் தொழிற்பயிற்சி சேர்க்கை முகாமினை பயன்படுத்தி க்கொள்ளலாம்.
இவ்வாறுஅதில் கூறப்பட்டுஉள்ளது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.