உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு, கோப்பை வழங்கல்

Published On 2023-10-28 09:36 GMT   |   Update On 2023-10-28 09:36 GMT
  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டனர்.
  • அமைச்சருக்கு நினைவு பரிசாக கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்கம், கலியபெருமாள் நினைவு கிரிக்கெட் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தின. கடந்த 18-ம் தேதி தொடங்கிய போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் போட்டிகள் முடிந்ததையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் காளிதாஸ் வாண்டையார் வரவேற்று பேசினார்.

விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சென்னை பிரியர் இன்டர்நேஷனல் அணிக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கி பாராட்டினார்.

இதேப்போல் 2-ம் இடம் பிடித்த எடைமேலையூர் சுரேஷ் கிளப் அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம், கோப்பை, 3 மற்றும் 4-ம் இடம் பிடித்த சென்னை ஜி.எஸ்.டி கஸ்டம், தஞ்சை பேட் மெம்மோரியல் அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கினார்.

மேலும் தொடர் நாயகன் பரிசாக ரூ.10 ஆயிரம், சிறந்த பேட்டர், சிறந்த பந்து வீச்சாளருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார்.இதையடுத்து அமைச்சருக்கு நினைவு பரிசாக கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், கவுன்சிலர்கள் மேத்தா, நீலகண்டன், தமிழ்வாணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணிகண்ணன், விளையாட்டு பயிற்சியாளர்கள் தமிழ்குமரன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய மாவட்ட இளைஞரணி மாநகர அமைப்பாளர் வாசிம்ராஜா நன்றி கூறினார்.

Tags:    

Similar News