செக்காரக்குடியில் சிறுதானிய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு
- சிறுதானியங்களின் பயன்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
- சிறப்பு விருந்தினராக ஊராட்சிதலைவர் ராமலெட்சுமி கலந்து கொண்டார்.
செய்துங்கநல்லூர்:
தமிழக அரசு 2022-2023-ம் நிதி ஆண்டை சிறு தானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் சிறுதானியங்களின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தில் கருங்குளம் வட்டார வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் சிறுதானிய பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வழிகாட்டுதலின் படி நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் ராமலெட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலை குழுமம் விவசாய தொழில்நுட்பங்களை கலைநிகழ்ச்சி மூலம் கூறினர். உதவி வேளாண் அலுவலர் திருவேணி, அட்மா தொழில்நுட்ப மேலாளர் ராஜலெட்சுமி, முத்துசங்கரி, மகேஸ்வரி, சலோமியா ஆகியோர் கலந்து கொண்டனர்.