உள்ளூர் செய்திகள்

கலெக்டர் லலிதா.

9 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு வகுப்புகள்- கலெக்டர் தகவல்

Published On 2022-12-10 07:38 GMT   |   Update On 2022-12-10 07:38 GMT
  • 10 -ம் வகுப்பு முடித்த பின்னர் 11 -ம் வகுப்பு எந்த பிரிவை தேர்தெடுத்து படிப்பது.
  • 12 -ம் வகுப்பிற்கு பிறகு எந்தெந்த கல்லூரிகளில் எப்படி விண்ணப்பிப்பது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் "நான் முதல்வன்" என்ற மாபெரும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் என்ற மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டம் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 1.12.2022 முதல் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நான் முதல்வன் திட்டத்தின் தொடர்ச்சியாக சிறந்த பயிற்றுநர்கள், மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய் கோட்டாட்சியர்கள் , துணை ஆட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வகுப்புகள் நடத்தப்படுவதன் மூலம் , 10- ம் வகுப்பு முடித்த பின்னர் 11- ம் வகுப்பு எந்த பிரிவை தேர்தெடுத்து படிப்பது தொழிற்கல்வி ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்பு 12- ம் வகுப்பிற்கு பிறகு எந்தெந்த கல்லூரிகளில் எப்படி விண்ணப்பிப்பது என்று மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான ஒரு விழிப்புணர்வு தெளிவு ஏற்படும்.

இதன் மூலம் மாணவர்களுக்கு ஊக்குவித்தலும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வகுப்பானது அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News