உள்ளூர் செய்திகள்

பேரணி நடந்தபோது எடுத்த படம்.

தேசிய கண்தான வார விழாவையொட்டி நெல்லை அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Published On 2023-09-04 09:29 GMT   |   Update On 2023-09-04 09:29 GMT
  • பேரணியை பாளை போலீஸ் உதவி கமிஷனர் பிரதீப் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
  • சைக்கிள் பேரணி நெல்லை அரசு மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவிலிருந்து ஆரம்பித்து அண்ணா விளையாட்டு திடல், தனியார் மருத்துவ மனை வழியாக மீண்டும் அரசு மருத்துவமனை வந்தடைந்தது.

நெல்லை:

கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை தேசிய கண்தான இரு வார விழா கொண்டாடப்படு கிறது.

அதன்படி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவ சிகிச்சைப் பிரிவு சார்பில் கண்தான விழிப்பு ணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை பாளை போலீஸ் உதவி கமிஷனர் பிரதீப் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

மருத்துவமனை கண்கா ணிப்பாளர் பால சுப்ர மணியம், துணை முதல்வர் சுரேஷ் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண் சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் ராமலட்சுமி வரவேற்று பேசினார்.

பேரணியில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவ- மாணவிகள் சென்றனர். பேரணியில் மருத்துவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் துணை மருத்துவக் கண்கா ணிப்பாளர் ஆறுமுகம், கண் சிகிச்சை பிரிவு இணை பேராசிரியர் ஆனந்தி, டாக்டர் ரீட்டா, உதவி மருத்துவர்கள் உமா, கவிதா மற்றும் செவிலியர்கள், முதுநிலை கண் மருத்துவப் பயிற்சி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கண் சிகிச்சை பிரிவு துறைத் தலைவர் ராமலெட்சுமி பேசியபோது, இந்த ஆண்டு 38-வது தேசிய கண் தான விழிப்புணர்வு விழாவாகும். கண் தானத்தில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதற்கு உறுப்பு தானத்திற்கு தமிழக அரசு அளித்து வரும் ஊக்கமும் முக்கிய காரணமாகும். மேலும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு எல்லோ ருக்கும் போய் சேரும் வகையில் இந்த கண்தான இரு வார விழாவை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், துயர்நிலை ஆலோ சகர் மற்றும் உடல் உறுப்புதான மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கி ணைப்பாளர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சைக்கிள் பேரணி நெல்லை அரசு மருத்துவ மனையின் கண் சிகிச்சை பிரிவிலிருந்து ஆரம்பித்து அண்ணா விளையாட்டு திடல், தனியார் மருத்துவ மனை வழியாக மீண்டும் அரசு மருத்துவமனை வந்த டைந்தது. முடிவில் செவிலி யர் பயிற்றுநர் செல்வன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News