நகைக் கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
- பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதி–யில் செயல்பட்டு வரும் நகைக் கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் போலீசார் சார்பில் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதி–யில் செயல்பட்டு வரும் நகைக் கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி கலையரசன் தலைமை வகித்து பேசியதாவது:-
நகை கடையின் பாதுகாப்பு கருதி நகைக் கடைக்கு முன்பும், கடைக்கு உள்ளேயும், நகை வைத்திருக்கும் முக்கியமான பகுதிகளிலும், கல்லாப்பெட்டி உள்ள பகுதிகளை பார்க்கும் வகையிலும் தரமான காமிராக்கள் பொருத்த வேண்டும்.
நகை கடைகளில் அலாரம் வைக்க வேண்டும். இரவு நேரங்களில் வாட்ச்மேன் அமர்த்த வேண்டும். கடைகளுக்கு தரமான உறுதியான பூட்டுக்களை போட வேண்டும். இரவு நேரங்களில் மின் விளக்குகளை எரிய விட வேண்டும்.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வட மாநில நபர்களால் திருட்டு நடைபெறுவதால், தாங்கள் கடை வைத்திருக்கும் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வட மாநிலத்தவர்களோ மற்றவர்களோ நின்று கொண்டு நோட்டமிட்டால் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அஜாக்கிரதையாக நகைக்கடைக்காரர்கள் இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.