உள்ளூர் செய்திகள்

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் திருப்பூரில் 4 நாட்கள் பண பரிவர்த்தனை பாதிக்க வாய்ப்பு

Published On 2023-01-24 07:35 GMT   |   Update On 2023-01-24 07:35 GMT
  • அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வருகிற 30, 31-ந் தேதிகளில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பின்னலாடை துறையினர் வங்கி சார்ந்த பணிகளை முன்னரே திட்டமிட்டு மேற்கொள்வது அவசியமாகிறது.

திருப்பூர் : 

வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஓய்வூதியம் உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வருகிற 30, 31-ந் தேதிகளில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்கள் வேலை நிறுத்தம், வரும் 28-ந் தேதி 4-வது சனிக்கிழமை, 29ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும். பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூரில் வங்கி சேவைகள் முக்கியமானதாக உள்ளது. பின்னலாடை துறையினர் வங்கி சார்ந்த பணிகளை முன்னரே திட்டமிட்டு மேற்கொள்வது அவசியமாகிறது.

வேலைநிறுத்தத்தின் ஒருபகுதியாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருப்பூரில் 2 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 27-ந்தேதி குமரன் ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மாலை 5:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

Tags:    

Similar News