உள்ளூர் செய்திகள்

விருதினை கலெக்டர் ரவிச்சந்திரன், பாரத் கல்வி குழுமத்தின் செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணனிடம் வழங்கிய போது எடுத்த படம். அருகில் பள்ளி நிர்வாகிகள் உள்ளனர்.

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான பசுமை -சுற்றுச்சூழல் விருது

Published On 2023-06-13 08:33 GMT   |   Update On 2023-06-13 08:33 GMT
  • சிறந்த பள்ளிக்கான விருது, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளிக்கு வழங்கப்பட்டது.
  • விருது பெற்ற காந்திமதி மோகன கிருஷ்ணனை பாரத் கல்விக் குழும நிர்வாகத்தினர் பாராட்டினர்.

தென்காசி:

இலஞ்சி பாரத் மாண்டிசோரி வளாகத்தில் முற்றிலும் இயற்கையான சுற்றுச்சூழலுடன் கூடிய கல்வியினை ஆண்டுதோறும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வருகிறது.

விருது ரொக்கப்பரிசு

இதனை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டுத் துறை சார்பில் 2022-23-ம் கல்வி ஆண்டின் சிறந்த பள்ளிக்கான பசுமை -சுற்றுசூழல் விருது, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளிக்கு வழங்கப்பட்டது.

விருது மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசினை தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், பாரத் கல்வி குழுமத்தின் செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுற்றுப்புற சூழல் துறையின் முன்னாள் பேராசிரியர் விஜயலட்சுமி கலந்து கொண்டார்.

சிறந்த பள்ளிக்கான விருதினை பெற்ற காந்திமதி மோகன கிருஷ்ணனை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Tags:    

Similar News