உள்ளூர் செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- வேத மந்திரங்கள் முழங்க மூலவர் கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கீழக்கரை தெற்கு பள்ளியமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் முதல் கால யாகபூஜை ஆரம்பிக்கப்பட்டு விக்னேஷ்வர பூஜை, ஹோமாதா பூஜை, கிராம யஜமான சங்கல்பம், ரக்க்ஷனபந்தனம் நடைபெற்று மாலை பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று 2-ம் கால யாக பூஜைகள் மற்றும் தீபாராதனை தொடங்கி யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூலவர் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.