உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பங்கேற்க வந்த வி.பி.துரைசாமியுடன் பா.ஜ.க. நிர்வாகிகள். 

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது

Published On 2022-07-25 10:12 GMT   |   Update On 2022-07-25 10:37 GMT
  • கடல் நடுவே அதிக செலவு செய்து பேனா சிலையை நிறுவ வேண்டுமா? என தி.மு.க.வினர் உணர வேண்டும்.
  • மத்திய அரசு கொடுத்த மானிய தொகையை உற்பத்தி திறனுக்கு பயன்படுத்தாமல், வேறு கடன் கட்டினேன் என மழுப்புகிறார்.

குமாரபாளையம்:

பா.ஜ.க. சார்பில் குமாரபாளையம் தொகுதி படவீடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில துணை தலைவர் துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடல் நடுவே அதிக செலவு செய்து பேனா சிலையை நிறுவ வேண்டுமா? என தி.மு.க.வினர் உணர வேண்டும். நிதி சுமை நிலையில் காலம் தாழ்த்தி கூட நிறுவலாம்.

பழங்குடியின பெண்மணி ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இதுவும் சாத்தியமாக முடியுமா? என்ற கேள்வி 140 கோடி மக்கள் மனதில் எழுந்தது. இதுவும் சாத்தியமாகும் என பிரதமர் நிரூபித்துள்ளார்.

பிரதமர், குடியரசு தலைவர் மூத்த நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். மின் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 51 சதவீதம் உயர்த்தி இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. ஆனால் செய்தியா ளர்களை சந்தித்து இந்த உயர்வு எத்தரப்பு மக்களையும் பாதிக்காது என சொல்கிறார்.

மத்திய அரசு கொடுத்த மானிய தொகையை உற்பத்தி திறனுக்கு பயன்படுத்தாமல், வேறு கடன் கட்டினேன் என மழுப்புகிறார். அதை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிவு பா.ஜ.க. அண்ணாமலையை தவிர எந்த கட்சிக்கும் தமிழகத்தில் இல்லை.

பொதுமக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை அனைவரும் எதிர்க்க வேண்டும். பா.ஜ.க.தான் பிரதான எதிர்கட்சியாக செயல்பட்டு கண்டன கூட்டங்கள் நடத்துகிறோம், போராடுகிறோம். எனவே அனைவரும் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் சரவணராஜன், மாவட்ட பொது செயலர் நாகராஜன், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் மகேஷ், நகர தலைவர் கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News