பொன்னேரியில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பட்டியலின அணி செயற்குழு கூட்டம்
- கட்சியின் வளர்ச்சி குறித்தும் பட்டியல் அணியின் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
- பிற கட்சிகளில் இருந்து விலகிய சிலர் பாஜகவில் இணைந்தனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பட்டியலின அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பட்டியலின அணி தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். மாநில பட்டியலணி செயலாளர் அன்பாலயா சிவகுமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநில அரசுத்துறை தலைவர் பாஸ்கர் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும் பட்டியல் அணியின் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும் பிற கட்சிகளில் இருந்து விலகிய சிலர் பாஜகவில் இணைந்தனர். இதில் மாவட்டச் செயலாளர்கள் நந்தன், பொன்.பாஸ்கர், கோட்டி, நகர தலைவர் சிவகுமார், இளங்கோ, பொன்னேரி நகர பட்டியலின அணி தலைவர் ஹரிதாஸ், வழக்கறிஞர் பிரிவு கௌதமன், பொன்னேரி நகர மகளிர் அணி தலைவர் ராகிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.