உள்ளூர் செய்திகள்

கண்களை கட்டியவாறு சுருள்வாள் சுற்றிய மாணவர்கள்.

கண்களை கட்டி தொடர்ந்து 2 மணி நேரம் சுருள்வாள் சுற்றி அசத்திய மாணவ- மாணவிகள்

Published On 2023-06-25 09:08 GMT   |   Update On 2023-06-25 09:08 GMT
  • தொடர்ந்து, 2 மணிநேரம் மிதித்து கொண்டே ஒற்றை கையில் சிலம்பம் சுற்றி சாதித்தனர்.
  • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சையில் இன்று 14 மாணவ -மாணவிகள் கண்கள் இரண்டையும் துணியால் கட்டியவாறு சுருள்வாள் சுற்றி புதிய உலக சோழன் சாதனை படைத்தனர்.

அதன் பற்றிய விவரம் வருமாறு :-

பார்வையிழந்தும் தன்னம்பிக்கையோடு நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக பல இன்னல்களையும் இடர்களையும் சந்தித்து வரும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியல் பற்றிய விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தும் நோக்கத்தில் 14 மாணவ-மாணவிகள் தொடர்ந்து 2 மணிநேரம் கண்கள் இரண்டையும் கட்டியவாறு சுருள்வாள் சுற்றி அனை வரையும் மெய்சிலிர்க்க வைத்து புதிய சோழன் உலக சாதனை படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவி வந்தனா என்பவர் தொடர்ந்து 2 மணிநேரம் ஒற்றைக் கையில் சுருள்வாள் சுற்றி புதிய சோழன் உலக சாதனை படைத்தார் . பின்னர் 4 மாணவர்கள் சைக்கிள்களை தொடர்ந்து 2 மணிநேரம் மிதித்துக் கொண்டே ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றி சாதித்தனர். இந்த மூன்று சாதனை நிகழ்ச்சிகளும் தஞ்சை சண்முகநாதன் நகரில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வை யோவான் சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளியின் ஆசான் ராமநாதன் ஒருங்கிணைத்து நடத்தினார். மேலும், சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் சார்பாக அதன் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன், தஞ்சை மாவட்டப் பொதுத் தலைவர் முனைவர் சந்தானசாமி மற்றும் தஞ்சை மாவட்டப் பொதுச் செயலாளர் நல்லாசிரியர் குழந்தைசாமி போன்றோர் நடுவர்களாக பங்கு கொண்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவர்களை கண்காணித்து உறுதி செய்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை வழங்கி பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் யோவான் சிலம்பப் பயிற்சிப் பள்ளியின் தலைமை ஆசான் யோவான், தன்னார்வ லர்கள் நீலமேகம், சஞ்சய், எஸ்தர் ராணி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சாதனை படைத்த மாணவ- மாண விகளை பாராட்டினர்.

Tags:    

Similar News