உள்ளூர் செய்திகள்
காலை உணவு வழங்கும் திட்டம்- சங்கரன்கோவில் நகராட்சி பள்ளியில் சேர்மன் ஆய்வு
- முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 25 -ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
- நகராட்சி மேற்கு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள 8 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 25 -ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கென ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியாளரை நியமித்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நகராட்சி மேற்கு நடுநிலைப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், வார்டு செயலாளர்கள் தங்கவேலு, பாட்டத்தூர் ராமலிங்கம், ஆசிரியை முத்துமாரி, ஹரி ஆகியோர் கலந்து கொண்டனர்.