உள்ளூர் செய்திகள் (District)

தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்த போது எடுத்தபடம். அருகில் அமைச்சர்கள் கீதாஜீவன், செஞ்சி மஸ்தான், மேயர் ஜெகன்பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் பலர் உள்னர்.

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர்வாரும் பணி- கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

Published On 2022-07-23 09:10 GMT   |   Update On 2022-07-23 09:10 GMT
  • திரேஸ்புரம் கடற்கரையில் ஜே.சி.பி. எந்திரங்களின் மூலம் நடைபெற்ற தூர்வாரும் பணியினை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
  • அமைச்சர்கள் கீதாஜீவன், செஞ்சி . மஸ்தான், கலெக்டர் செந்தில் ராஜ், மேயர் ஜெகன்பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தூத்துக்குடி 3-வது மைலில் ஆரம்பித்து பக்கிள்ஓடை முடிவடையும் பகுதி வரை திரேஸ்புரம் கடற்கரையை தூர்வரப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை பக்கிள் ஓடை கடற்கரையில் சந்திக்கும் இடமான திரேஸ்புரம் கடற்கரையில் ஜே.சி.பி. எந்திரங்களின் மூலம் நடைபெற்ற தூர்வாரும் பணியினை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி . மஸ்தான், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், மேயர் ஜெகன்பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ, மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News