உள்ளூர் செய்திகள்

மாட்டுவண்டி பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வும், விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரனும் கொடி அசைத்து தொடங்கி வைத்த காட்சி

விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

Published On 2023-05-07 08:16 GMT   |   Update On 2023-05-07 08:16 GMT
  • பிள்ளையார்நத்தம் கிராமத்தில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பில் 4-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
  • மாட்டுவண்டி பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வும், விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரனும் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி, பேச்சியம்மாள் கோவில் கொடை விழாவை முன்னிட்டு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பில் 4-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. விளாத்திகுளம்-கோவில்பட்டி சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, சின்னமாடு என 3 பிாிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.

3 மைல் தூரம் கொண்ட தேன்சீட்டு மாட்டுவண்டி பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வும், பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரனும் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் முதல் பரிசு ரூ.8 ஆயிரத்தை பூசனூர்-எட்டையபுரம் மாட்டு வண்டியும், 2-வது பரிசு ரூ.6 ஆயிரத்தை கூத்தலூரணியை சேர்ந்த சுந்தரபாண்டி அய்யனார் மாட்டு வண்டியும், 3-வது பரிசு ரூ.4 ஆயிரத்தை பல்லாகுளம் பொன்முனியம்மாள் மாட்டு வண்டியும்,4-வது பரிசு ரூ.3 ஆயிரத்தை எப்போதும் வென்றானை சேர்ந்த தங்கமுத்துமாரி மாட்டு வண்டியும் பெற்றது.

இதனைத்தொடர்ந்து நடு மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.

Tags:    

Similar News