உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் நான்கு வழிச்சாலையில் பஸ் நிலையம் இருக்கும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-07-02 08:59 GMT   |   Update On 2023-07-02 08:59 GMT
  • யூனியன் அலுவலகம் அருகே காமராஜ்நகர் பஸ் நிலையம் இயங்கி வந்தது.
  • மாணவர்கள் அரை கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து செல்லும் நிலை உள்ளது.

தென்காசி:

நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 வருடமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் பாவூர்சத்திரம் யூனியன் அலுவலகம் அருகே காமராஜ் நகர் வடக்கு- தெற்கு என இரு பகுதிகளுக்கும் சேர்த்து காமராஜ்நகர் பஸ் நிலையம் இயங்கி வந்த நிலையில் தற்பொழுது அதனை அகற்றியுள்ளனர்.

½ கிலோ மீட்டர்

பாவூர்சத்திரம் காமராஜ்நகர் பகுதி பொது மக்கள் மற்றும் கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மாணவ ர்கள் அனைவரும் காமராஜ் நகர் பஸ் நிலையத்தை பயன்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது நான்கு வழிச் சாலை பணி முடிவுற்ற நிலையில் காமராஜ்நகர் பகுதியில் புதிய பஸ் நிலையத்தை அமைக்காமல் அதிலிருந்து கிழக்கே ½ கிலோ மீட்டர் தொலைவில் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிரே புதிய பஸ் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது.

இதனால் அரசு பள்ளிக்கு பஸ்கள் மூலம் வரும் மாணவர்கள் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கோரிக்கை

எனவே குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகம் பள்ளி இருக்கும் பகுதியில் பஸ் நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பாவூர்சத்திரம் த.பி. சொக்கலால் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் காமராஜ் நகர் குடியிருப்பு வாசிகளின் சார்பில் கோரி க்கை வைக்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

Similar News