உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

நடுவூர் கால்நடை பண்ணையில் 9-ந் தேதி முந்திரி மரங்கள் ஏலம்- கலெக்டர் தகவல்

Published On 2023-04-29 09:38 GMT   |   Update On 2023-04-29 09:38 GMT
  • வங்கி வரைவோலைகள் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலான தேதியிட்டதாக இருக்க வேண்டும்.
  • ஏலம் நடைபெறுவதற்கு முன்னரே துணை இயக்குனரின் முன் அனுமதியுடன் மரங்களை பார்வையிடலாம்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சையை அடுத்த நடுவூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் உள்ள 186 எண்ணிக்கை பலன்தரும் மரங்களான முந்திரி மரங்களின் மகசூலினை 2023-24-ம் ஆண்டிற்கு அனுபவம் செய்ய பொது ஏலம் அடுத்த மாதம் (மே) 9-ந்தேதி காலை 11 மணிக்கு நடுவூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் நடைபெறுகிறது.

ஏலம் அரசு விதிமுறை களின்படி நடைபெறுகிறது. ஏலத்தில் கலந்து கொள்ளும் ஏலதா ரர்கள் முன்வைப்புத்தொ கையாக ரூ.10 ஆயிரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் எடுக்க வேண்டும்.

வங்கி வரைவோலைகள் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலான தேதியிட்டதாக இருக்க வேண்டும். ஒரு ஏலதாரரிடம் இருந்து ஒரு வரைவோலை மட்டுமே ஏற்றுக்கொ ள்ளப்படும்.

ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட ஏலதாரர்களுக்கு ஏலத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அனுமதி டோக்கன்கள் வழங்கப்படும்.

ஏலத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர் மற்றும் முகவரி தகவலுக்காக போலீசாருக்கு அனுப்பிவைக்கப்படும்.

ஏலம் எடுத்த மரங்களின் விளைபயனை அங்கீகரிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு ஆண்டு காலத்திற்கு மட்டுமே அனுபவிக்க இயலும்.

ஏலம் நடைபெறுவதற்கு முன்னரே துணை இயக்குனரின் முன் அனுமதியுடன் மரங்களை பார்வையிடலாம்.

ஏலத்தை தள்ளி வைக்கவோ, ரத்து செய்யவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News