ஓசூரில் மத்திய அரசின் சாதனை திட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
- விழாவில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலு வலர் ஜெயந்தி, உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
- பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.
ஓசூர்,
இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மூலமாக நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஓசூரில் மத்திய அரசின் சாதனை திட்டங்கள் குறித்த 3 நாட்கள் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி, காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமிதியில் நேற்று தொடங்கியது.
சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,பெங்களூரு சுங்க இலாகாத் துறை ஆணையாளர் பாலமுருகன் புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த விழாவில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் ஜெயந்தி, உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். மேலும், நிகழ்ச்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.
விழாவில்,கல்லூரி மாணவ, மாணவியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, கள விளம்பர அலுவலர் பிபின் எஸ். நாத் வரவேற்றார். முடிவில், கோவை, மக்கள் கள அலுவலக தொழில்நுட்ப உதவியாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.