உள்ளூர் செய்திகள் (District)

கடலூர் அருகே பரபரப்பு: லாரி மீது பஸ் மோதி விபத்து-13 பேர் காயம்

Published On 2022-12-01 09:01 GMT   |   Update On 2022-12-01 09:01 GMT
  • கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி மலட்டாற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது தனியார் பஸ்க்கு முன்பு டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது.
  • இதனை தொடர்ந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு புதுவை மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்

கடலூர்:

திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூருக்கு நேற்று தனியார் பஸ்சை செஞ்சியை சேர்ந்த சிவா (வயது 26) என்பவர் பயணிகளை ஏற்றுக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி மலட்டாற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது தனியார் பஸ்க்கு முன்பு டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிப்பர் லாரி பிரேக் அடித்ததால் பின்னால் வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழுந்து பலத்த சத்தத்துடன் லாரி மீது மோதி நின்றது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறி துடித்து பஸ்ஸில் பயணம் செய்த 10 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு புதுவை மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் முருகேசன் (வயது 50) கலைவாணி (வயது 36) சுகுணா (வயது 20) மாரியம்மாள் (33), மணிமாறன் (50), பிருந்தாவதி (65), மோகன் (39), விஜயலட்சுமி (49), சக்திவேல் (47), ராஜேந்திரன் (58), பார்த்திபன் (35), முருகானந்தம் (42), தாயம்மாள் (40) ஆகிய 13 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கடலூர் - புதுச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News