உள்ளூர் செய்திகள்

கறிக்கோழி விலை ரூ.114 ஆக உயர்வு

Published On 2023-01-02 09:38 GMT   |   Update On 2023-01-02 09:38 GMT
  • இன்று காலை‌ கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • இதில் கறிக்கோழியின் தேவை, உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழியின் தேவை, உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு மேலும் ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.112 ஆக இருந்த கறிக்கோழி விலை, ரூ.114 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. அதில் முட்டை கோழியின் தேவை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.85 ஆகவே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News