உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கிய போது எடுத்த படம்.

தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

Published On 2023-06-28 09:06 GMT   |   Update On 2023-06-28 09:06 GMT
  • விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
  • திலகராஜ் என்ற அரசு ஊழியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதல் -அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 2022-2023-ம் ஆண்டி ற்கான நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், தனுஷ்குமார் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ.,மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ- மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாது, விளையா ட்டிலும் சிறந்து விளங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தென்காசி மாவட்டத்தில் பாட்டாக்குறிச்சி கிராமத்தில் உள்விளையாட்டு மற்றும் பல்நோக்கு விளை யாட்டரங்கம் அமைப்பதற்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நமது மாவட்ட த்திற்கு மேலும் பல பரிசுகள் பெற்று பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் தனுஷ் குமார் எம்.பி. பேசியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. மாணவ-மாணவிகள் படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டு மற்றும் பிற திறமைகளை வளர்த்து கொண்டு பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

தென்காசி சித்திர சபை நாட்டியாஞ்சலி குரு புருசோத்தமன் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் , விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சிறப்பு நடன நிகழ்ச்சியும் நடந்தது.

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2022-23-ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 1500 வீரர், வீராங்க னைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் சிறப்பாக பணியாற்றிய உடற்கல்வி ஆய்வாளர், உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியைகள், உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் அரசு ஊழியர்கள் பிரிவில் ஆண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் திலகராஜ் என்ற அரசு ஊழியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உதயகிருஷ்ணன் , மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News