உள்ளூர் செய்திகள்

சி.ஐ.டி.யு. போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்

வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்து சி.ஐ.டி.யு. போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-18 08:21 GMT   |   Update On 2023-04-18 08:21 GMT
  • ஆர்ப்பாட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் இசக்கி தலைமை தாங்கினார்.
  • தொழிற்சாலை சட்டதிருத்தம் என்ற பெயரில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற கூடாது.

நெல்லை:

நெல்லை அரசு போக்குவரத்துக கழகத்தின் சி.ஐ.டி.யு. ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வண்ணார்பேட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் இசக்கி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தொடக்க உரையாற்றினார்.

அவுட்சோர்சிங் முறையில் டிரைவர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், தொழிற்சாலை சட்டதிருத்தம் என்ற பெயரில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற கூடாது என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விரைவு போக்குவரத்து கழக மாநில துணை பொதுச்செயலாளர் சுதர்சிங், மத்திய சங்க உதவி செயலாளர் அருள் மற்றும் நிர்வாகிகள் பொன்ராஜ், வெங்கடாசலம், பெருமாள், மோகன், சரவணகுமார் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். டி.என்.எஸ்.டி.சி. பொதுச்செயலாளர் ஜோதி நிறைவுரையாற்றினார்.

Tags:    

Similar News