உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே சாமி ஊர்வலத்தின்போது இரு கிராம இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களை கிராம மக்கள் 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தபோது எடுத்தபடம்.

கோவில் திருவிழாவில் இரு கிராம இளைஞர்களிடையே மோதல் 6 வாலிபர்கள் கைது

Published On 2023-06-11 07:14 GMT   |   Update On 2023-06-11 07:14 GMT
  • திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான மஞ்சல் நீராட்டு விழா நடைபெற்றது.
  • கோவில் பேனரையும் கிழித்து எரிந்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பழ முக்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆயியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் (கூழ் ஊற்றுதல்) நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இக்கோவில் திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான மஞ்சல் நீராட்டு விழா நடை பெற்றது. விழாவை முன்னிட்டு பழமுக்கல் கிராமத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நல்லாளம் கிராமத்தை சேர்ந்த ஆஷிக் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். சாமி ஊர்வலத்தில் சென்றவர்களிடம் வழி விட்டு ஓரமாக செல்லுமாறு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பழமுக்கல் இளைஞர்கள் ஆஷிக்கை தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆஷிக், நல்லா ளம் கிராமத்திற்கு சென்று நண்பர்களிடம் இதனை தெரிவித்தார்.

உடனடியாக ஆஷிக்கை, அவரது நண்பர்கள் பழ முக்கல் கிராமத்திற்கு அழைத்து வந்தனர். ஆஷிக்கை தாக்கியவர் களிடம் நியாயம் கேட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி தகரா றாக மாறியது. அங்கிருந்த செங்கல், சவுக்கு தடி போன்ற வைகளால் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும், கோவில் பேனரையும் கிழித்து எரிந்தனர். இதில் 10-க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிரம்ம தேசம் போலீசார் காய மடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் பழமுக்கல், நல்லாளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது பிரம்மதேசம் இன்ஸ் பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இருதரப் பைச் சேர்ந்த அன்பரசன் (வயது 25), அருள் (23), பிரசாந்த் (23), கிஷோர் (18), மணிகண்டன் (30), சோமசுந்தரம் (25) ஆகி யோரை பிரம்மதேசம் போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மரக்காணம் அருகே கோவில் திருவிழாவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு கிராம இளைஞர்களிடையே தகராறு நடந்தது அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News