நெல்லை மண்டலத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணி
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- வாரந்தோறும் சனிக்கிழமை மாநகர பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் நாளை விடுமுறையை ஒட்டி முன்னதாகவே இன்று நடத்த கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
நெல்லை:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வாரந்தோறும் சனிக்கிழமை மாநகர பகுதி யை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் நாளை விடுமுறையை ஒட்டி முன்னதாகவே இன்று நடத்த கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மண்டலத்தில் தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் சுகாதார அலுவலர் இளங்கோ முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியானது சாலை தெரு, தொண்டர் நயினார் சன்னதி சாலைகளில் நடைபெற்றது. அந்த பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. இதில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் முத்துராஜ், மனோஜ், மாரியப்பன், மேஸ்திரி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.