தூய்மை இயக்க திட்ட விழிப்புணர்வு போட்டி-வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகள்
- முதல் மூன்று இடம் பிடித்த மாணவ -மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
- நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சியில் தமிழக அரசு அறிவித்துள்ள தூய்மை நகர இயக்கம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சியை தூய்மைப்படுத்துவதிலும், நெகிழியை தவிர்ப்பதிலும் பொதுமக்கள் பங்கு என்ற தலைப்பில் சங்கரன்கோவிலில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ -மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் ஜெயபிரியா, சுகாதார அலுவலர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தனர்.இதில் கட்டுரை போட்டியில் வென்சியா, சரண்யா, பொன் சிவராஜன் ஆகியோர் முதலிடமும், தினேஷ், பரத்குமார் பாலசுப்ரமணியன் ஆகியோர் இரண்டாம் இடமும், திருமலைநம்பி, ஹர்சினி, சங்கரநாராயணன் ஆகியோர் மூன்றாம் இடத்தையும்,
ஓவிய போட்டியில் சிவசக்தி, வெள்ளத்துரை, கைலாஷ் முதலிடத்தையும், விக்னேஷ், நாகராஜ், கர்நிதா 2ம் இடத்தையும், சரித்திரா, ஸ்மிர்த்தியா, ராஜஸ்ரீ ஆகியோர் 3 ம் இடத்தையும் பெற்றனர். மேலும் மத்திய அரசின் திறனாய்வு தேர்வில் நகராட்சி பள்ளியில் பயின்று தேர்வு பெற்ற அசினாபேகம், மகாலட்சுமி, ராஜேஸ்வரி உள்ளிட்ட மாணவ- மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், நகர நிர்வாகி மாரிச்சாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மாரிசாமி, வெங்கட்ராமன், மாரிமுத்து, கருப்பசாமி மற்றும் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள், பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.