உள்ளூர் செய்திகள்
சுரண்டையில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் கூட்டு துப்புரவு பணிகள்
- நிகழ்ச்சியின்போது நீர் நிலைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சுரண்டை:
சுரண்டையில் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் அறிவுறுத்தலின் பேரில் கமிஷனர் உத்தரவின்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் கூட்டு துப்புரவு பணி, நீர் நிலைகளை சுத்தம் செய்தல், கட்டிட இடிபாடு கழிவுகளை அகற்றுதல், அனுமதி இன்றி வைக்கபட்ட பேனர்கள், போஸ்டர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் தூய்மை இயக்க உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.