திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தில் கலெக்டர் ஆய்வு
- சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகள் குறித்து விசாரித்தார்.
- முடிந்தவரை விரைவில் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள நம்பிக்கை மனநல காப்பகத்தில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு, மருந்து, மாத்திரைகள் குறித்து விசாரித்தார்.
மேலும், மனநல மருத்துவர் வருகை, மனநல மருத்துவ சிகிச்சை, காப்பகத்தில் பராமரி க்கப்படும் பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, குடிநீர், தங்குமிடம், சமையல் செய்யும் இடம், கழிவறைகள் ஆகியவற்றை பார்த்து சுகாதாரம் குறித்து அறிவுரை வழங்கினார்.
மேலும், நீண்ட நாட்களாக தங்கி இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனநல மருத்துவரின் ஆலோசனை பெற்று முடிந்தவரை விரைவில் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் கூறினார்.
மேலும், காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன், சமூக பணியாளர் சக்தி பிரியா, செவிலியர் சுதா, பயிற்சி அளிக்கும் வள்ளி, ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர்களிடம் இவர்களை விரைவில் குணமாக்கும் விதம்நம்மிடம் தான் உள்ளது என்பதை நினை வில் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதுகுறித்து காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில்:-
கலெக்டர் நேரில் வந்து காப்பகத்தை பார்வையிட்டு எங்களுடன் கலந்து பேசியது, நாங்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரை, ஆலோசனைகள் வழங்கியது எங்களது பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என உத்வேகம் அளிக்கிறது என்றார்.
ஆய்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, தாசில்தார் மலர்க்கொடி ஆகியோர் உடன் இருந்தனர்.