கீழப்பாவூர் பகுதியில் வேளாண் பணிகளை கலெக்டர் ஆய்வு
- மானியத்தில் வழங்கிய ஆடு,மாடு மற்றும் கோழிகள், ஊட்டச்சத்து காய்கறி விதைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
- பெத்தநாடார்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட தரிசு நில தொகுப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் வெள்ளக்கால் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் தலா 45,000 வீதம் மானியத்தில் வழங்கிய ஆடு,மாடு மற்றும் கோழிகள், ஊட்டச்சத்து காய்கறி விதைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.தொடர்ந்து பெத்தநாடார்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட தரிசு நில தொகுப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்மலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பாலசுப்பிரமணியன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சேதுராமலிங்கம், துணை அலுவலர் முருகன் உட்பட பலர் உடனிருந்தனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் தாமஸ், மாரியம்மாள், ரமேஷ், செய்யது அலி பாத்திமா, குமார் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சந்திரன், முத்துராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.