ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
- வாக்குப்பதிவு வருகின்ற 27-ந் தேதி நடைபெறுகிறது. மேலும் பதிவானவாக்குகள் எண்ணிக்கை வருகின்ற மார்ச் மாதம் 2-ந் தேதி நடைபெறவுள்ளது.
- வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27-ந் தேதி நடைபெறுகிறது. மேலும் பதிவானவாக்குகள் எண்ணிக்கை வருகின்ற மார்ச் மாதம் 2-ந் தேதி நடைபெறவுள்ளது.
அதன்படி ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பாதுகாத்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி, உதவி இயக்குநர் (நில அளவைத்துறை) சுப்ரமணியம், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி, தாசில்தார்கள் சிவகாமி (தேர்தல்), பாலசுப்ரமணியம் (ஈரோடு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.