உள்ளூர் செய்திகள் (District)

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் முரளிதரன் பரிசு வழங்கினார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு

Published On 2022-10-05 04:40 GMT   |   Update On 2022-10-05 04:40 GMT
  • போடிநாயக்கனூர் ஏல விவசாய சங்க கலை கல்லூரியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
  • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிழ்களை கலெக்டர் வழங்கினார்.

தேனி:

தேனி மாவட்டத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு போடிநாயக்கனூர் ஏல விவசாய சங்க கலை கல்லூரியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு இவ்வாண்டின் கருப்பொருளான "சுற்றுலா மறு சிந்தனை" என்ற தலைப்பில் கலை கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிழ்களை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.

கட்டுரைப்போட்டியில் போடிநாயக்கனூர் ஏல விவசாய சங்க கலை கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு பயிலும் மாணவி கீர்த்தினி முதலிடத்தினையும், பி.எஸ்.சி 3-ம் ஆண்டு மாணவி நாகலெட்சுமி 2ம் இடத்தினையும், பி.ஏ. 3ம் ஆண்டு மாணவி அனிதா 3ம் இடத்தினையும் பெற்றனர்.

பேச்சுப்போட்டியில் பி.எஸ்.சி 3ம் ஆண்டு மாணவி ஐஸ்வர்யராய் முதலிடத்தினையும், வர்த்தகம் படிக்கும் மாணவி பவித்ரா 2ம் இடத்தையும், அதே பிரிவில் பயிலும் மாணவன் விக்னேஷ்வரன் 3ம் இடத்தினையும் பெற்றனர். மேலும், ஓவியப்போட்டியில் பி.காம் மாணவி ரெஷாந்தனி முதலிடத்தினையும், மாணவி திவ்யா 2ம் இடத்தினையும், மாணவி ஐஸ்வர்யராய் 3ம் இடத்தையும் பெற்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், மாவட்ட சுற்றுலா அலுவலர் (மு.கூ.பொ) பாஸ்கரன், கல்லூரி மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News