- மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் சராசரி மதிப்பெண் அதிகம் பெறுவதற்கான ஆலோசனை கூட்டம்.
- 750 ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு மற்றும் சராசரி மதிப்பெண் அதிகம் பெறுவதற்காக திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பாடம் நடத்தும் அனைத்து வகை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் திருவாரூர் வ.சோ.அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேலுடையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலர் விஜயா மற்றும் திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர் மாதவன் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினர்.
இதில் 750 ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் ஒருங்கிணைப்பாளர்களாக மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ச.ஜயராமன், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் என்.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரிய ஏற்பாடு களை செய்திருந்தனர்.