உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பல்லடத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

Published On 2022-06-10 08:08 GMT   |   Update On 2022-06-10 08:08 GMT
  • பள்ளி குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு, வாசிப்பு திறன் வளர்க்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
  • தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 6-ந்தேதி தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

பல்லடம்,

பல்லடத்தில், வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு, வாசிப்பு திறன் வளர்க்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படித்த 8 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினார்கள். இதையடுத்து வரும் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் முழுமையாக எண்ணறிவையும், எழுத்தறிவையும் பெற்றிடும் வகையில் தமிழக அரசு 6 முதல் 8 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 100 அரசு,மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 6-ந்தேதி தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

Tags:    

Similar News