கடலூர் - தி சுசான்லி டாக்டர் ரவி, உஷா ரவிக்கு விருது
- கடலூர் தி சுசான்லி டாக்டர் ரவி, உஷா ரவிக்கு விருது வழங்கப்பட்டது.
- கொரோனா காலகட்டத்தில் பல்வேறு மருத்துவ சேவைகள் பல இலட்சம் மூலிகை மருந்துகளை இலவசமாக வழங்கினார்கள்.
கடலூர்:
கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்கின் தலைமை மருத்துவர் பேராசிரியை டாக்டர் உஷாரவி, சுசான்லி டாக்டர் ரவி கடந்த 30 வருடங்களாக இயற்கை மருத்துவத்துறையில் தனித் திறனுடனும், தனிப்பற்றுடனும் சேவை செய்து கொண்டுள்ளனர். இவரும் குறு, சிறு தானியங்கள், மூலிகைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருவதோடு, பல சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளனர்.
இந்த நிலையில் பேராசிரியை உஷாரவி பைபாஸ் அக்குபஞ்சர் என்ற தனது ஆய்வுக் கட்டுரையின் மூலமாக உலக அக்குபஞ்சர் கருத்தரங்கு 2000-ம் ஆண்டில் சீனாவில் சிறப்பு விருது பெற்றார்.
அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்ற தாய்க்கு ஏற்படும் சில பின் விளைவுகளை எளிய முறையில் அக்குபஞ்சரில் குணப்படுத்துவது எப்படி என ஆய்வு செய்திருந்தார். சுசான்லி டாக்டர் ரவி , பேராசிரியர் உஷா ரவி மருத்துவ ஆய்வுக்கட்டுரைகள், மருத்துவ மற்றும் பொதுநலன் விழிப்புணர்வு கட்டுரைகள், கொரோனா காலகட்டத்தில் பல்வேறு மருத்துவ சேவைகள் பல இலட்சம் மூலிகை மருந்துகளை இலவசமாக வழங்கினார்கள். இவ்வாறு பல சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இவர்களின் சேவைப் பணியினை பாராட்டி கோவையில் பேரவை மற்றும் தனியார் ஏஜென்சி உள்ளிட்டவைகள் இவர்களை தேர்ந்தெடுத்து க்ரைம் கதையாசிரியர் ராஜேஷ் குமார், திரைப்பட இயக்குனர் உதயகுமார், எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், மோகன்தாஸ் மற்றும் சுபா சுப்புரத்தினம் ஆகியோரால் பின்னாக்கல் பெர்பார்மர் அவார்டு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.