கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் பக்திகோஷத்துடள் இன்று காலை நடந்தது.
- கடலூர் திருப்பாதிரிப்பு லியூரில் பிரசித்தி பாடல் பெற்ற ஸ்தலமாக பாடலீ–ஸ்வரர் கோவில் இருந்து வருகின்றது. இக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்பு லியூரில் பிரசித்தி பாடல் பெற்ற ஸ்தலமாக பாடலீ–ஸ்வரர் கோவில் இருந்து வருகின்றது. இக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 5- ந்தேதி கொடி யேற்றத்துடன் வைகாசி பிரமோற்சவ விழா விமர்சி யாக தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் சாமி காலை மற்றும் மாலையில் வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. பின்னர் அதிகாரநந்தி 5-ம் நாள் விழாவில் கோபுர தரிசனம், மற்றும் மகாமேரு தெருவடைச்சான் விழா, 7-ம் நாள் திருவிழாவின் போது தாயாருடன் பாடலீஸ்வரர் கைலாச வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் கோவில் முன்பு எழுந்தருளி கோபுர தரிசனம், மாலை திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளி ரிஷப வீதி உலாவும் நடைபெற்றது உள்ளது. நேற்று காலை குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்தி–கள் வீதி உலாவும், பிச்சாண்ட–வர் வீதி உலாவும், தங்க கைலாய வாகனத்தில் சாமி வீதி புறப்பாடும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (13- ந்தேதி) திருவிழாவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்கா ர–த்தில் தாயாருடன் பாடலீஸ்வரர் எழுந்தருளி கோவில் வளாகத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, திருத்தேரில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சி அளித்து எழுந்தருளி னார்.இதனை தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்க–ப்பட்ட தேரை மாவட்ட கலெக்டர் பாலசுப்ர–மணியம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கொடியசைத்து வைத்து வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, ஜி.ஆர்.கே.குழும நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.துரைராஜ்,சுபஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர்கள் வி.பி.எஸ். கணேசன், வி.பி.எஸ். ரவிசங்கர், க.தீபக், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.கே. சுப்ரமணியன், வி.ஜி.கே. மருத்துவமனை டாக்டர் வி.கே கணபதி, அ.ம.மு.க மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, அ.தி.மு.க பகுதி செயலாளர் வெங்கட்ராமன்,மாதர் நலத் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீமதி ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கு திரண்டி ருந்த ஏராளமான பக்தர்கள் பாடலீஸ்வரா, பரமேஸ்வரா "ஓம் நமசிவாய ஓம் நமசிவாய" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய மாடவீதியில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்ததது. அப்போது வரதராஜபெருமாள் கோவில் சார்பாக பட்டு மற்றும் மாலை சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக திரளாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இரவு தேரிலிருந்து மண்ட கப்படி பூஜை மற்றும் பஞ்சமூர்த்திகள் கோவில் வந்தடைய உள்ளது. 14 ந் தேதி 10-ம் நாள் திருவிழாவில் காலை ஸ்ரீநட ராஜர் தரிசனம் மற்றும் ஸ்ரீநடராஜர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடை பெற உள்ளது. அப்போது பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி யும், இரவு ராஜ வீதி உலாவும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 15- ந்தேதி (புதன்கிழமை) காலையில் அறுபத்துமூவர் தீபாராதனையும், தேரடி வீதியில் உள்ள திருஞான சம்பந்தர் தங்க தோடி கானாவில் திருக்குளத்தில் எழுந்தருளி ஞானப்பால் உண்ட ஐதீகம், பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனங்களில் வீதி உலா, இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் நடை பெற்று திருஞானசம்பந்தர் தங்கப் பல்லக்கிலும் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களிலும் வீதிஉலா நடைபெற உள்ளது.
வருகிற 16-ந் தேதி கோவில் முன்பு உள்ள திருக்குளத்தில் மின்விளக்கு அலங்காரத்துடன் கூடிய தெப்பல் ஸ்ரீ முருகப்பெரு மான் வலம்வருதல் விழா மற்றும் பரதநாட்டிய விழா வும் நடைபெற உள்ளது. இரவு வெள்ளி ரிஷப வாக னத்தில் சண்டே–ஸ்வரர் வீதி உலா நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வருகிற 17-ஆம் தேதி வரை நடை பெற உள்ள நிலையில் கோவில் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு விழா–க்கோலம் பூண்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் ஆயிரக்க–ணக்கான மக்கள் கோவி லுக்கு வந்து செல்வதால் முன்னெச்சரிக்கை நடவ–டிக்கை பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் நடை பெற்று வருகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள் தலை மையில் நடைபெற்று வருகின்றது.