உள்ளூர் செய்திகள் (District)

சேதமடைந்த வாய்க்கால் கதவணையை சீரமைக்க வேண்டும்

Published On 2023-07-19 09:42 GMT   |   Update On 2023-07-19 09:42 GMT
  • தண்ணீர் வாய்க்காலில் புகுந்து வயல்களில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
  • நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சி தென்கரை வழியாக தென்கரை பாசன வாய்க்கால் வடக்கு புத்தாறு ஆற்றில் இருந்து பிரிந்து செல்கிறது.இந்த வாய்க்காலின் மூலம் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.

இந்த நிலையில் தென்கரை பாசன வாய்க்காலில் தலைப்பில் உள்ள மதகில் உள்ள கதவனை சேதமடைந்து உள்ளது.இதனால் விவசாயத்திற்கு தேவையான நேரத்தில் தண்ணீரை திறந்து தேவையற்ற நேரத்தில் அடைத்து வைக்க முடியாத நிலை உள்ளது.மேலும் மழை வெள்ள காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களிலும் தண்ணீர் வாய்க்காலில் புகுந்து வயல்களில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.

இதனால் விவசாய நிலங்கள் பாதிப்பு க்குள்ளாகும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த வாய்க்கால் கதவணையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News