உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

திருவாரூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-15 08:30 GMT   |   Update On 2023-03-15 08:30 GMT
  • எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குபதிவு செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
  • அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது.

திருவாரூர்:

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது அவர் கூறியதாவது,

சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து, விமான நிலையத்திலிருந்து அங்குள்ள பேருந்தில் எளிமையான முறையில் பயணம் செய்த எடப்பாடி பழனிச்சாமியை, ஒருவர் தேவையற்ற பிரச்சனைகளை எழுப்புகிறார்.

கோஷம் போடுகிறார்.

இதனால், எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அரசு வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது.

நெல் மூட்டைகள் மட்டுமல்ல அரசின் அனைத்து திட்டமும் தேங்கி கிடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் சிவராஜாமாணிக்கம், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பிற அணி நிர்வாகிகள் பொன்.வாசுகிராம், பாலாஜி, கலியபெருமாள், ஒன்றியச் செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வம், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News